Friday 8 May 2015

இந்திய ராணுவத்தின் தரைப்படைப் பிரிவில் தற்போது 'ஹவில்தார்' பயிற்சியுடனான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது

இந்திய ராணுவத்தின் தரைப்படைப் பிரிவில் தற்போது 'ஹவில்தார்' பயிற்சியுடனான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 334 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அறிவியல் பிரிவில் - 200 பேர். கலைப் பிரிவில் - 134 பேர். இந்தியக் குடியுரிமை பெற்ற, இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி ஆண்களிடம் இருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி: 

* அறிவியல் பிரிவு பணிக்கு கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், கணினியியல் போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம். 

* கலைப் பிரிவு பணிக்கு, இந்தி, ஆங்கிலம், உருது, வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியியல், சமூகவியல் போன்ற துறைகளில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம். 

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்பப் படிவம் தயார் செய்ய வேண்டும். அதில் புகைப்படம் ஒட்டி, அனைத்து விவரங்களையும் நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள், புகைப்படங்கள், அஞ்சல் உறை ஆகியவை சான்றொப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். 
விண்ணப்பங்கள் அருகிலுள்ள மண்டல தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, அந்தமான் நிகோபார் தீவு விண்ணப்பதாரர்கள் 

HQ Trg Zone,
Fort Saint George,
Chennai- 600009
 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். 

அஞ்சல் முகப்பில் “APPLICATION FOR HAVILDAR EDUCATION” என்று குறிப்பிட வேண்டும்.

முக்கிய தேதிகள்: விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள்: 15.5.2015

No comments:

Post a Comment